Connect with us

இந்தியா

திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Published

on

நகைத் திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாவிட்டால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையினை அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 25.11.2025 அன்று உத்தரவிட்டுள்ளது.

நகைத்திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டறியமுடியாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலான வழக்குகள் குறித்து 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது அந்தந்த மாவட்ட கூடுதல் டிஎஸ்பி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக திறமை மிக்க காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு காவல் பிரிவு ஒன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பிரிவில் பணிபுரிபவர்களுக்கு விசாரணை உத்திகள் புகார்தாரருக்கும் அரசுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் வழக்கை நவீன முறையில் கையாள்வது எப்படி என்பது குறித்து தொழில்நுட்ப ரீதியிலான பயிற்சியை தமிழக காவல்துறை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை எஸ்.எஸ்.காலணி புறவழிச்சாலை புகுதி சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனு.

2015 ம் ஆண்டு நவம்பர் மாதம் என் வீட்டுக் கதவை உடைத்து சுமார் 75 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.39 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை என எனக்கு தகவல் தெரிவிக்காமலேயே காவல்துறையினர் வழக்கை முடித்து விட்டிருக்கின்றனர். எனவே இந்த வழக்கை வேறு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றி திருடு போன நகைகளை மீட்டுத் தர வேண்டும் என அவர் கோரினார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் 25.11.2025 அன்ற விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவின் சாராம்சம்.

நகைகள் பொருள்கள் திருட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை என போலீசார் பதிவு செய்து விடுகின்றனர். இந்த நடைமுறை இனி வரும் காலங்களில் மாற்றப்பட வேண்டும். நகைகள் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை என போலீசார் பதிவு செய்த நாளிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் புகார்தாரருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். திருடு போன நகைகளின் மொத்த மதிப்பில் சுமார் 30 சதவீதத் தொகையை புகார்தாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்  என உத்தரவிடப்பட்டது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Products collect leads.