Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 12.12.2025

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இன்று 75வது பிறந்த நாள். திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் வாழ்த்து. படையப்பா படம் ரீ-ரிலீஸ் ஆனது.

சென்னையில் டபுள் டக்கர் மின்சார பேருந்து அறிமுகம். கிழக்கு கடற்கரை சாலையில் சோதனை ஓட்டம்.

2வது டி 20 – இந்திய அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.

தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி.

வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்த பெங்களுர் ஜோடி – மணமகனையும் அவர் குடும்பத்தினரையும் வெட்டி விட்டு மணமகளை கடத்திய பெண் வீட்டார் 9 பேர் அதிரடி கைது.

“தி கேரம் குயின்“ என்ற பெயரில் கேரம் விளையாட்டின் உலக சாம்பியனான சென்னை காசிமா வின் வாழ்க்கை கதை திரைப்படமாகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் காலமானார்.

அமித்ஷா நான் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. என் சவாலை ஏற்கவில்லை. கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து கிராம் ரூ.12250க்கும் சவரன் ரூ.98000க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.215000க்கு விற்பளையாகிறது.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை சிறப்பிக்கும் “வெல்லும் தமிழ் பெண்கள்” விழாவும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட 2வது விரிவாக்கமும் இன்று பிற்பகல் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

நாடு முழுதும் இன்று 17 லட்சம் புதிய பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொகை ரூ.1000 அவரவர் வங்கி கணக்கு அனுப்பப்பட்டது.

16 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து மீண்டும் சாதனை.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Sell products collect.