இந்தியா
சைவமா? அசைவமா? உணவு பாக்கெட்டுகளில் நிறக்குறியீடு கட்டாயமாக்கப்படுகிறது.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பொருள்களின் லேபிள்களில் 12 வகையான தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் மற்றும் பதிவு எண், உணவின் பெயர், உற்பத்தியாளர் பெயர், முழு முகவரி, தயாரித்த தேதி, நிகர எடை, காலாவதி தேதி, ஊட்டச்சத்து விவரம், உள்பொருள்களின் விவரங்கள் மற்றும் அளவு, இறக்குமதி விரங்கள், உணவுப் பொருள்களுக்கான பிரத்யேக குறியீடு, பேட்ச் எண், தொடர்பு கொள்ள தொலைபேசி எண், சைவமா அசைவமா என்பதை அடையாளப்படுத்தும் குறியீடு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
தற்போது பெரு நிறுவனங்கள் மற்றும் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் தயாரிக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்களின் லேபிள்களில் பச்சை அல்லது சிவப்பு வண்ணம் கொண்ட குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் இந்த உணவுகள் சைவ மூலப்பபொருள்களை கொண்டு செய்யப்பட்டனவா அல்லது அசைவப் பொருள்கள் சேர்க்கப்பட்டு செய்யப்பட்டதா என்பதை கண்டறிய முடியும்.
இதேபோல சிறு குறு நிறுவனங்கள் மற்றும் குடிசைத்தொழில் நிறுவனங்கள் ஆகியவைற்றின் உற்பத்திப் பொருள்களில் இந்த குறியீடுகள் இதுவரையில் இடம் பெறாமலிருந்தது இனிமேல் கட்டாயம் என அரசு உத்தரவி்டுள்ளது என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
இந்த விதிகள் அணைத்து வகை பாக்கெட் உணவுகளுக்கும் பொருந்தும். மீறும் நிறுவனங்கள் மீது சட்டப்படியான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.















