இந்தியா
சென்னை பறக்கும் ரயிலை வாங்கப் போகிறதா தமிழ்நாடு அரசு?

பறக்கும் ரயில் சென்னையில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை 19.34 கிலோமீட்டர் துரத்திற்கு ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வேளச்சேரியிலிருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரை விரிவாக்கத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த இரயில் பிரிவு தற்போது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரயில்வே வசம் உள்ளது. 67 சதவிது பங்கு தமிழக அரசு வசமும் 33 சதவீத பங்கு இந்திய ரயில்வே வசம் உள்ளது. இன்னும் சில நாள்களில் ஒப்பந்தம் போடப்பட்டு ரயில்வே வசம் உள்ள 33 சதவீதம் பங்குகளை 600 முதல் 700 கோடி ரூபாய்க்கு வாங்க இருக்கிறது தமிழ்நாடு அரசு.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் இதை குறித்து ஆலோசனை செய்து விட்டு வந்துள்ளதை தொடர்ந்து இந்த ஒப்பந்தத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ரயில்வே பிரிவை வாங்கிய பிறகு இதனை நவீன மெட்ரோ ரயில் போல மாற்றி தொடர்ந்திட உலக வங்கியிடம் ரூ.4000 கோடி கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
புதிய பெட்டிகள் ஏசி வசதியுடன் வாங்கவும் இடையில் உள்ள 20 ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தவும் ரயில் நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவில் வசதிகளை உருவாக்கவும் எஸ்கலேட்டர் லிப்ட் கழிப்பறை வெளிச்சம் உள்ளிட்ட வசதிகளை வழங்கவும் இத்தொகை செலவிடப்பட உள்ளது.
பயண நேரம் தற்போது 90 நிமிடமாக உள்ளதை 60 நிமிடமாக குறைத்து 4 லட்சம் பேர் வரை பயணிக்கும் விதமாக இதன் திறன் மேம்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க் டவுன் ரயில் சிலையத்திற்கு சென்று வர உள்ள பாதை குறுகலாக இருப்பதால் இரண்டு திசையிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் மேம்பாலத்தை கடக்க 10 நிமிடங்கள் ஆவதால் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் மிகுந்நத சிரமப்படுவதோடு பாதுகாப்பற்ற நிலையும் இருப்பதால் இவற்றை சரிசெய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது.
இந்தியாவில் ஒன்றிய அரசின் ரயில்வேயிலிருந்து மாநில அரசின் மெட்ரோவுக்ககு மாற உள்ள முதல் ரயில் சேவை இது என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள்.இதனால் சென்னையில் போக்குவரத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
