இந்தியா
கிராமங்களில் சிலிண்டர் முன்பதிவு இடைவெளி அதிகரிப்பு

மேற்காசிய போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு இறக்குமதி செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டதை அடுத்து முதலில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் முன்பதிவு செய்து 21 நாள்களான பிறகே அடுத்த சிலிண்டர் பதிவ செய்ய முடியும் என்பதை 25 நாள்களாக மாற்றி ஆணையிடப்பட்டது.
நேற்று ஒன்றிய அரசு சிலிண்டர் முன்பதிவு இடைவெளியை மீண்டும் மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதன்படி மகர்ப்புற பகுதிகளில் 25 நாள்களும் கிராமப் புறங்களில் 45 நாள் எனவும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் 13 முதல் அமலக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


