Connect with us

வணிகம்

ஜொமைட்டோ டெலிவரி ஊழியர்கள் இப்படியும் ஏமாற்றுகிறார்களா? சி.இ.ஓ அதிர்ச்சி!

Published

on

zomato

எவ்வளவுதான் சம்பளம் கொடுத்து ஒரு ஊழியரை மிகச் சிறந்த முறையில் நிறுவனம் வைத்திருந்தாலும் அந்த ஊழியர்களில் சிலர் சந்தர்ப்பம் கிடைத்தால் முறைகேடு செய்து அதிக சம்பாத்தியம் செய்ய தயங்க மாட்டார்கள் என்பது ஒரு சில சம்பவங்கள் மூலமாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஜொமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் செய்த முறைகேடு தற்போது வாடிக்கையாளர் ஒருவரின் பதிவின் மூலம் அம்பலம் ஆகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் பர்கர் ஆர்டர் செய்தார். அதற்காக அவர் ரூ.200 ஆன்லைனில் பணம் செலுத்தி உள்ளார். 30 நிமிடங்களில் ஜொமைட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் அந்த நபருக்கு பர்கரை டெலிவரி செய்தார். அதன்பின் அவர், ‘நீங்கள் அடுத்த முறை 700 முதல் 800 ரூபாய் வரை உணவு ஆர்டர் செய்தால் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டாம், கேஷ் ஆன் டெலிவரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள், நான் உங்களுக்கான உணவைக் கொண்டு வருவேன், அந்த உணவை நீங்கள் வாங்கவில்லை என்று நான் நிறுவனத்திற்கு கணக்கு காட்டிவிட்டு உங்களிடம் 200 அல்லது 300 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு அந்த 700 ரூபாய் மதிப்புள்ள உணவை தந்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

அவருடைய இந்த மோசடி எண்ணத்தைக் கேட்டு அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இவ்வாறு முறைகேடு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த பதிவை படித்த ஜொமைட்டோ சி.இ.ஓ அதிர்ச்சி அடைந்து இந்த சம்பவம் என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது, கண்டிப்பாக இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஜொமைட்டோ மட்டுமின்றி கேஷ் ஆன் டெலிவரி என்ற ஆப்ஷன் வைத்திருக்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த முறையை இனி தொடர வேண்டுமா என யோசிக்க வேண்டும் அல்லது மோசடி நடைபெறாமல் மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தற்போது அவசியமாக உள்ளது.

கேஷ் ஆன் டெலிவரி என்ற ஒரு ஆப்ஷன் ஆக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தாலும் அதில் இது போன்ற முறையில் செய்வது என்பது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை தொழிலதிபர்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?