Connect with us

வணிகம்

ஜொமைட்டோ டெலிவரி ஊழியர்கள் இப்படியும் ஏமாற்றுகிறார்களா? சி.இ.ஓ அதிர்ச்சி!

Published

on

zomato

எவ்வளவுதான் சம்பளம் கொடுத்து ஒரு ஊழியரை மிகச் சிறந்த முறையில் நிறுவனம் வைத்திருந்தாலும் அந்த ஊழியர்களில் சிலர் சந்தர்ப்பம் கிடைத்தால் முறைகேடு செய்து அதிக சம்பாத்தியம் செய்ய தயங்க மாட்டார்கள் என்பது ஒரு சில சம்பவங்கள் மூலமாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஜொமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் செய்த முறைகேடு தற்போது வாடிக்கையாளர் ஒருவரின் பதிவின் மூலம் அம்பலம் ஆகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைனில் பர்கர் ஆர்டர் செய்தார். அதற்காக அவர் ரூ.200 ஆன்லைனில் பணம் செலுத்தி உள்ளார். 30 நிமிடங்களில் ஜொமைட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் அந்த நபருக்கு பர்கரை டெலிவரி செய்தார். அதன்பின் அவர், ‘நீங்கள் அடுத்த முறை 700 முதல் 800 ரூபாய் வரை உணவு ஆர்டர் செய்தால் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டாம், கேஷ் ஆன் டெலிவரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளுங்கள், நான் உங்களுக்கான உணவைக் கொண்டு வருவேன், அந்த உணவை நீங்கள் வாங்கவில்லை என்று நான் நிறுவனத்திற்கு கணக்கு காட்டிவிட்டு உங்களிடம் 200 அல்லது 300 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டு அந்த 700 ரூபாய் மதிப்புள்ள உணவை தந்து விடுவேன் என்று கூறியுள்ளார்.

அவருடைய இந்த மோசடி எண்ணத்தைக் கேட்டு அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இவ்வாறு முறைகேடு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த பதிவை படித்த ஜொமைட்டோ சி.இ.ஓ அதிர்ச்சி அடைந்து இந்த சம்பவம் என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது, கண்டிப்பாக இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஜொமைட்டோ மட்டுமின்றி கேஷ் ஆன் டெலிவரி என்ற ஆப்ஷன் வைத்திருக்கும் அனைத்து நிறுவனங்களும் இந்த முறையை இனி தொடர வேண்டுமா என யோசிக்க வேண்டும் அல்லது மோசடி நடைபெறாமல் மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தற்போது அவசியமாக உள்ளது.

கேஷ் ஆன் டெலிவரி என்ற ஒரு ஆப்ஷன் ஆக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தாலும் அதில் இது போன்ற முறையில் செய்வது என்பது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை தொழிலதிபர்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்11 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 12.07.2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் முழு விவரம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2026: 12 ராசிகளுக்குமான தினபலன், அதிர்ஷ்ட நேரம் மற்றும் பரிகாரம்!

சினிமா12 மணி நேரங்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா2 நாட்கள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இந்தியா6 நாட்கள் ago

பார்ட்டி ஃபண்ட் பணம் அரசுக் கணக்கில் சேர்க்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

ஆன்மீகம்6 நாட்கள் ago

சம்பாபதி அம்மன் கோயிலும் ’பொய் பேசினால் கொன்று விடும்’ சதுக்க பூதங்களும்

இந்தியா6 நாட்கள் ago

சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நெய்மர் அறிவிப்பு

கட்டுரைகள்6 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

செய்திகள்6 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

வணிகம்2 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

வணிகம்2 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

Translate »
Jeeter juice live resin. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. „stille nacht, flauschige nacht“ von petra schier (weihnachtshund 4).