வேலைவாய்ப்பு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியிடங்கள் 280 உள்ளது. உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
வேலை: Assistant
மொத்த காலியிடங்கள்: 280
கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது: 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
மாத சம்பளம்: ரூ.44,900 + இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.epfindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/Exam_RR_Assistan_51.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.06.2019



















