Connect with us

வணிகம்

பெண்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை TAMCO கடன் – வருடத்திற்கு 8% வட்டி மட்டுமே!

Published

on

தமிழ்நாடு அரசு சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் TAMCO (Tamil Nadu Minorities Economic Development Corporation) மூலம், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான சிறுகடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் குழுவாக இணைந்து சிறு தொழில், வணிகம் செய்வதை ஊக்குவிக்கப்படுகிறது.

கடன் வழங்கப்படும் திட்டங்களின் விவரம்:

திட்டம் 1:

  • கடன் தொகை: ஒரு உறுப்பினருக்கு அதிகபட்சம் ₹1,00,000

  • வட்டி விகிதம்: ஆண்டு 7%

  • கடன் காலம்: 3 ஆண்டுகள்

  • வருமான வரம்பு: வருடம் ₹3 லட்சம் (நகர்ப்புறம்/கிராமப்புறம்)

திட்டம் 2:

  • கடன் தொகை: ஒரு உறுப்பினருக்கு அதிகபட்சம் ₹1,50,000

  • வட்டி விகிதம்:

    • பெண்களுக்கு: 8%

    • ஆண்களுக்கு: 10%

  • கடன் காலம்: 3 ஆண்டுகள்

  • வருமான வரம்பு: வருடம் ₹8 லட்சம்

தகுதியும் நிபந்தனைகளும்:

  • விண்ணப்பதாரர் சிறுபான்மையினருக்கான சுயஉதவி குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும்

  • குறைந்தபட்சம் 6 மாதம் சேமிப்பு மற்றும் நடவடிக்கையில் பங்கேற்று இருக்க வேண்டும்

  • குழுவில் 60% சிறுபான்மையினர் இருக்க வேண்டும்

  • குழுவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை: குறைந்தபட்சம் 10, அதிகபட்சம் 20

  • பெண்கள் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

தேவைப்படும் ஆவணங்கள்:

  • மதச் சான்றிதழ் / சாதி சான்றிதழ் / பள்ளி மாற்றுச்சான்றிதழ்

  • வருமானச் சான்றிதழ்

  • ஆதார் அட்டை நகல்

  • குழு உறுப்பினர் விவரங்கள்


🏢 விண்ணப்பிக்கும் இடங்கள்:

  • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள்

  • மாவட்ட ஆட்சியரகம்

  • மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள்

  • நகர/தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கிளைகள்

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Meci việt nam on x : "meci việt nam chúng tôi là “ô sin” nhà xưởng nhà xưởng muốn vận hành ổn định cần có sự chăm chút từ nhiều công việc phía sau.