Connect with us

ஆன்மீகம்

ஆன்மீகத்தில் 108 மற்றும் 1008 எண்களின் ஆழமான அர்த்தம் – ஏன் இந்த எண்கள் புனிதமானவை?

Published

on

இந்துமத ஆன்மீகத்தில் 108 மற்றும் 1008 என்ற எண்கள் புனிதமானதும் ஆழமான அர்த்தங்களை கொண்டதும் ஆகும். இவை சிக்கலான சாஸ்திரக் கோட்பாடுகளுக்கும், விஞ்ஞான வரம்புகளுக்கும் அப்பால் செல்கின்றன.

108 என்ற எண்ணின் ஆன்மீக அர்த்தம்:

108 என்பது ஒரு யோகிக மற்றும் காஸ்மிக் எண் என்றும் சொல்லப்படுகிறது. இந்த எண்ணின் பின்னணி பலதரப்பட்ட கோணங்களில் இருந்து விளக்கப்படுகிறது:

  • 27 நட்சத்திரங்கள் × 4 பாதங்கள் = 108 பாதங்கள்
    இதனால்தான், 108 நாமாவளி சொல்லி கடவுளுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.

  • 12 ராசிகள் × 9 கிரகங்கள் = 108
    இதுவும் ஜோதிட ரீதியாக இதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

  • பூமியின் சுற்றளவைவிட சூரியன் 108 மடங்கு பெரியது, பூமியிலிருந்து நிலவின் தூரமும் அதன் விட்டத்தைவிட 108 மடங்கு அதிகம்.

  • வர்மக்கலை: மனித உடலில் 108 உயிர்புள்ளிகள் உள்ளன என குறிப்பிடப்படுகிறது.

  • மனிதன் தினமும் 21,600 முறைகள் சுவாசிக்கிறான் – இரவில் 10,800, பகலில் 10,800. இதனால் 10800 என்ற எண்ணும் முக்கியத்துவம் பெறுகிறது.

  • 108°F (பாரன்ஹீட்) என்பது ஒரு மனித உடல் சகிக்கும் வெப்பநிலை வரம்பு. இதைக் கடந்தால் உயிருக்கு ஆபத்தாகலாம். அதனால்தான், அவசர எண்ணாக 108 ஐ பயன்படுத்துகின்றனர்.

  • பரதநாட்டியம் மற்றும் யோகா கரணங்கள் – இரண்டிலும் 108 கரணங்கள் உள்ளன.

  • முக்திநாத், உத்திரகாண்ட் போன்ற தீர்த்தங்களில் 108 நீரூற்றுகள், 108 சிவசன்னதிகள் உள்ளன.

 1008 என்ற எண் மற்றும் அதன் மங்களம்:

1008 என்பது ஆன்மீக ரீதியில் சஹஸ்ரார சக்கரம் (சிரசில் இருக்கும் ஆனந்த புள்ளி) என்ற உயர்ந்த நிலையை குறிக்கிறது.

  • 1008 சிவலிங்கங்கள் கொண்ட கோயில்கள் மிகவும் புண்ணியத்திற்குரியவை. இதில் ஒரே நேரத்தில் வழிபடுவது ஆயிரம் சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் அளிக்கும் என நம்பப்படுகிறது.

  • தேவியின் 1008 நாமங்கள், விஷ்ணுவின் 1008 திருநாமங்கள் என, முக்கிய கடவுள்களின் நாமங்களை 1008 முறைகள் உச்சரிப்பது சாதாரண வழிபாடுகள் அல்ல – அவை ஆன்மீக பரிபூரணத்தை தரும்.

  • ஸ்ரீ ராமானுஜரின் 1008-வது அவதார நாள்: இது வைணவ சமுதாயத்தில் மிகப்பெரும் ஆன்மீக நாளாக கொண்டாடப்படுகிறது.

  • சமணர், புத்த மதம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் கூட 1008 ஐ ஒரு புனித எண்ணாக ஏற்றுள்ளன.

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..