Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஜூன் 22 முதல் 27 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

வாரபலன்

மேஷம்:

தடைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெறும் மேஷராசியினரே இந்த வாரம் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வார இறுதியில் வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். கவனம் தேவை.

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல்  வியாபாரம் இருந் தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரும். பயணங்கள் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம் : தினமும் கந்தர் அலங்காரம் படியுங்கள். நன்மைகள் நடக்கும்.

*************************************************************************************

ரிஷபம்:

நிதானத்தை சிதற விடாமல் வெற்றியை நோக்கி பயணிக்கும் ரிஷபராசியினரே உங்களது கருத்துக்கு  மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். வார தொடக்கத்தில் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சி களை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும்.

குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும்குழந்தைகளால்  பெருமை பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை வாரத்தின் பிற்பகுதியில் செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம்: லஷ்மி தேவிக்கு மரிக்கொழுந்து சாற்றி வழிபட துன்பங்கள் விலகும்.

*************************************************************************************

மிதுனம்:

செய்யும் வேலையை ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யும் மிதுன ராசியினரே இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம்பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கி டையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள்  நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும்

தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும்பணவரத்து திருப்திதரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள்  தரும்போது கவனமாக இருப்பது நல்லது.  

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்ச னைகளை தீர்க்க முயற்சிகளை மேற் கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவை யற்ற செலவு ஏற்படலாம். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயண்ம் செய்ய  மனதில் நினைத்தது நிறைவேறும்.

*************************************************************************************கடகம்:

செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறும் கடகராசியினரே இந்த வாரம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.. சிலருக்கு உங்கள் செல்வாக்கை  கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவைஎதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்கூட்டு தொழில் செய்ப வர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்தி கரமாக இருக்கும்.

பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வார இறுதியில் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம்

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்

பரிகாரம்: நாக தெய்வங்களுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட மனக்குழப்பம் தீரும்.

*************************************************************************************

சிம்மம்:

கடமையில் இருந்து ஒரு போதும் தவறாத  சிம்மராசியினரே நீங்கள் எல்லோராலேயும்  நேசிக்க கூடியவராகவும் இருப்பீர்கள். இந்தவாரம் முன்புதடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர்  பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள்  பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள் மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனை கள் தோன்றும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கை யாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை.

பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல் பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

பரிகாரம்: சிவனடியார்களுக்கு மரியாதை கொடுத்து தொண்டு புரிந்து வாருங்கள்.

*************************************************************************************

கன்னி:

ரகசியத்தை ஒருவரிடமும் சொல்லாமல் காப்பாற்றும் கன்னி ராசியினரே நீங்கள் ஊக்கமுடன் உழைக்க தயங்காதவர்கள். இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடை பிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடை கள் அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் வார இறுதியில் கிடைக்கலாம்

பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதான மாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.

பரிகாரம்: ஏழை 5 பேருக்கு அன்னமிட்டு உதவுங்கள். நன்மைகள் அதிக அளவில் உண்டாகும்.

*************************************************************************************

துலாம்:

எதிலும் கவனமாக செயல்பட்டு வெற்றி பெறும் துலாம் ராசியினரே உங்கள் மனம் குழப்பம் இன்றி தெளிவாக இருக்கும். இந்த வாரம் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். வார மத்தியில்  திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்க ளின் அறிமுகத்தால் நன்மை உண்டா கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளை களுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள்  சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.

பரிகாரம்: வாழ்க்கையில் கஷ்டப்படும் ஏழை பிராமணருக்கு உதவுங்கள். அன்னமிடுங்கள்.

*************************************************************************************

விருச்சிகம்:

மனதிற்கு விரோதமான காரியங்களை ஒரு போதும் செய்ய விரும்பாத விருச்சிக ராசியினரே இந்த வாரம் நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் மன வருத்தம் ஏற்படலாம். வாழ்க்கை துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட் களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் தாமதமாக நடைபெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது

பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

பரிகாரம்: குழந்தை வடிவில் இருக்கும் முருகனை வழிபடுங்கள். குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிக் கொடுங்கள்.

*************************************************************************************

தனுசு:

தன் மனதிற்கு விரோதமான காரியங்களை ஒரு போதும் செய்யாத   தனுசு ராசியினரே  இந்தவாரம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும்.வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளை களால் பெருமை சேரும்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும்வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வார இறுதியில் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.

பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும்வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை அணிவித்து பிரார்த்தியுங்கள்.

*************************************************************************************

மகரம்:

தன்னை வருத்தப்படுத்திக் கொண்டு பிறரை மகிழ்விக்கும் மகர ராசியினரே இந்த வாரம். வெளியூர்  பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லதுதிடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக் கும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி  நடந்து முடியும். பயணங் கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடு படுவீர்கள்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வார இறுதியில் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.

பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும்.

மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: முன்னோர்களை வணங்கி வர அவர்களின் ஆசிர்வாதத்துடன் காரியங்கள் நடக்கும்.

*************************************************************************************

கும்பம்:

செய்யும் வேலையை திறம்படச் செய்து முடித்து பாராட்டு பெறும் கும்ப ராசியினரே இந்த வாரம் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனா ருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளு டன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்க ளது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லதுபயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது

பரிகாரம்: முன்னோர்கள் படத்திற்கு தினமும் மல்லிகை மலர் வைத்து வணங்க நினைத்த காரியங்கள் நடக்கும்.

*************************************************************************************

மீனம்:

தன்னுடைய விருப்பத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும்  மீன ராசியினரே நீங்கள் காலத்தை  வீணாக்க மாட்டீர்கள். இந்த வாரம்  பொருள் சேர்க்கை உண்டாகும். அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம்  அன்பாக நடந்து கொள்வீர்கள்.

தொழில் வியாபாரம் நன்றாக  நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள்  வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டா கும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது

பரிகாரம்: 

ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுங்கள். சாஸ்தா வழிபாடு செய்யுங்கள்.

*************************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா22 மணி நேரங்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு! இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம், செல்வம் மற்றும் வெற்றிகள் குவியும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அரசு வேலை கனவு நனவாகுமா? 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி ரேவதி நட்சத்திர பெயர்ச்சி 2026: அடுத்த 4 மாதங்கள் ராஜயோகம்! ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும் குவியும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

Translate »
rv transport oregon. Learn more about troubleshooting wordpress. power only louisiana.