இந்தியா
ராகுல் காந்தி தகுதிநீக்கம் ஜனநாயக படுகொலை… கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்!

பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

#image_title
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலைக்கு இணையானது, இவ்வளவு அவசரமாக இப்படியொரு தீர்ப்பு வரக்காரணம் என்ன? என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். ராகுலின் தகுதி நீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமாது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாகும் என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி தகுதி நீக்கம் திட்டமிட்ட அரசியல் சாதி, இதை வன்மையாக கண்டிக்கிறோம். 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் செய்யலாம் என்பதால் வழிவாங்கும் நடவடிக்கை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம். ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளிலும் பாஜக முயன்றதாக காங்கிரஸ் தலைவர் மலிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டியுள்ளார்.

#image_title
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கவிடாமல் செய்துவிடலாம் என்று பாஜக திட்டமிட்டுகிறது என திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது கடும் கண்டனத்துக்குரியது, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கருத்துக் கூறினால், அவர்களின் பதவியை குறி வைத்து பாஜக அரசு நடவடிக்கை எடுப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.