இந்தியா
உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்! பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது… பாசிச பாஜக என விளாசல்!

பாஜக தொடர்ந்த வழக்கில் நேற்று குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அதிரடியாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததையடுத்து ராகுல் காந்தி எம்.பி பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

#image_title
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை என பல அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனையடுத்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், எங்கள் சகோதரர் ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த தவறான நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். 2019 தேர்தல் பேச்சுக்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுத்த பாஜக எம்.எல்.ஏ ஒருவரால் இது தூண்டப்பட்டது. இத்தகைய மிரட்டல்கள் பாசிச பாஜகவை எதிர்த்துப் போராடுவதைத் தடுக்காது.
தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும், அவரை எம்.பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.