சினிமா
சிவகார்த்திகேயன் – கார்த்தி படங்கள் ஒரே நாளில் வெளியாகிறதா?

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி ஆகியோரது படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனை மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்தப் படத்தில் அதிதி ஷங்கர் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இன்னொரு பக்கம் நடிகர் கார்த்தி ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இரண்டு படங்களுமே ஒரே நாளில் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, இந்த வருடம் ஜூன் மாத இறுதியில் இந்தப் படம் வெளியாக படக்குழு திட்டமிட்டுள்ளது.

Karthi
அதற்கேற்றாற் போல விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க உள்ளனர். இதற்கு முன்பு கார்த்தி- சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘தம்பி-ஹீரோ’ மற்றும் ‘சர்தார்-பிரின்ஸ்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது. இதில் ‘தம்பி-ஹீரோ’ ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக சுமாராக அமைய, ‘சர்தார்-பிரின்ஸ்’ படங்களில் ‘ப்ரின்ஸ்’ தோல்வியைத் தழுவியது. ‘சர்தார்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று இரண்டாம் பாகமும் வர இருக்கிறது எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ‘மாவீரன்- சர்தார்’ படங்கள் மூலமாக மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் -கார்த்தி மோத உள்ளனர். இந்தப் படங்களின் வெளியீடு குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.