சினிமா செய்திகள்
‘ஆல் க்ளியர்… சொன்ன தேதியில் படத்தைக் கொண்டுவந்தேன்’- ‘சக்ரா’ விவகாரத்தில் விஷால்!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள ‘சக்ரா’ திரைப்படம் நாளை வெளியீடு செய்யப்படுகிறது.
நடிகர் விஷால் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் சக்ரா. இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்தன் இந்தக் கதையை விஷாலுக்கு முன்னதாக ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொல்லி ஒப்பந்தம் மேற்கொண்டதாக ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் உரிமையாளர் ரவி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் கீழ் உண்மை தெரியும் வரையில் சக்ரா படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த சூழலில் கடந்த வாரமே வெளியாக வேண்டிய படத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் விஷால் தரப்பில், ‘இயக்குநருக்கும் ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கும் இடையே போடப்பட்டிருந்த ஒப்பந்தம் எங்களுக்குத் தெரியாது, அவர்களுக்குள்ளான பிரச்னையில் சக்ரா படத்துக்கு தடை விதிப்பது தயாரிப்பாளர் முதல் விநியோகஸ்தர்கள் வரையில் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், பட வெளியீட்டுக்கு உத்தரவு தர வேண்டும்’ என விண்ணப்பிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம் படம் முதலில் வெளியாகட்டும் விஷால் வேண்டுமென்றே செய்தாரா என்பது குறித்த விசாரணை தொடரும். சக்ரா படத்தின் பிப்ரவரி 19 முதல் மார்ச் 5 வரையிலான வசூல் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆல் க்ளியர். உண்மை வென்றது. திட்டமிட்டப்படி பிப்ரவரி 19-ம் தேதி உலக அளவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும்’ என அறிவித்துள்ளார்.
All Clear for #Chakra????️
Grand Worldwide Release Tomorrow!#ChakraFromTomorrow#ChakraKaRakshak#VishalChakra @VishalKOfficial @thisisysr @ShraddhaSrinath @ReginaCassandra @srushtiDange @AnandanMS15 @gobeatroute pic.twitter.com/21Q3DMYhPJ
— Vishal Film Factory (@VffVishal) February 18, 2021




















