சினிமா செய்திகள்
பிரம்மாண்ட புராண படத்திலிருந்து விலகிய சீயான் விக்ரம்… பாலிவுட் நடிகருக்கு அடித்த லக்..!

பிரம்மாண்டமான புராண படமாக உருவாக இருக்கும் ‘சூரியபுத்ர மஹாவீர் கர்ணா’ திரைப்படத்திலிருந்து நடிகர் சீயான் விக்ரம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாள இயக்குநர் விமல் இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட படம் ‘சூரியபுத்ர மஹாவீர் கர்ணா’. முதலில் 60 கோடி பட்ஜெட்டில் உருவாக இருந்த படம் பின்னர் 300 கோடி ரூபாய் பட்ஜெட் ஆக உயர்ந்தது. இதனால், பிரித்விராஜ் விலகி 2018-ம் ஆண்டு விக்ரம் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் தயாரிப்பாளர்கள் மாறி பாலிவுட் தயாரிப்பாளர்கள் களம் இறங்கினர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாக இருந்தது படம். இந்த சூழலில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது படத்தின் மோஷன் லோகோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் நடிகர் விக்ரம் குறித்தப் பெயர், படம் என எந்த அறிவிப்பும் இல்லை.
இதனால், விக்ரம் ‘சூரியபுத்ர மஹாவீர் கர்ணா’ படத்திலிருந்து விலகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விக்ரம் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிஸியாக இருப்பதால் விலகியதாகக் கூறப்படுகிறது. ‘சூரியபுத்ர மஹாவீர் கர்ணா’ படத்துக்கு தற்போது பாலிவுட் நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.