Connect with us

தமிழ்நாடு

நர்ஸ்களுடன் தான் நடித்த படத்தை பார்த்த விஜயகாந்த்: வைரல் புகைப்படம்!

Published

on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நல பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்றார் என்பதும் அவருடன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் சென்றார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் வெளிநாட்டில் விஜயகாந்த், தான் நடித்த திரைப்படத்தை பார்த்த புகைப்படத்தை தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 30ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்றார். வழக்கமான உடல் பரிசோதனை செய்வதற்காகவே அவர் துபாய் சென்றிருப்பதாகவும் அவரது தரப்பிலிருந்து தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் விஜயகாந்த் துபாய் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ்களுடன் தான் நடித்த ‘சத்ரியன்’ என்ற திரைப்படத்தை பார்த்து உள்ளார். அவர் அந்த திரைப்படத்தை மிகவும் ரசித்து பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இது குறித்து விஜயகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்’ என்று பதிவு செய்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Charter the recently refitted (2024) falcon 86s motor yacht beyfendi h in göcek..