வணிகம்
நாடு கடத்துவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் விஜய் மல்லையா!

இந்தியாவில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெயரில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, லண்டனில் நீதிமன்ற காவலில் உள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனவே விரைவில் விஜய் மல்லையா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது லண்டன் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பிரிட்டன் உச்ச நிதிமன்றத்தில் விஜய் மல்லையா மல்முறையீடு செய்துள்ளார்.
இந்தியாவில் ஊழல் செய்து விட்டு பிரிட்டனில், விஜய் மல்லையா, நீர்வ் மோடி, லலித் மோடி உள்ளிட்டவர்கள் தஞ்சம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















