Connect with us

சினிமா

‘விடுதலை’ சவாலானது- வெற்றிமாறன்!

Published

on

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது, ” இந்தப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத களத்தில் நடக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதை. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்” என்றார்.

நடிகர் சூரி பேசியதாவது, ” எத்தனையோ முறை காமெடியனாக மேடை ஏறி உள்ளேன். ஆனால் முதல் முறையாக கதை நாயகனாக மேடை ஏறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளையராஜாவை இசை கடவுள் என்றே சொல்வேன். அவரது இசையில் பாடலில் நான் ஒரு உருவமாக இருப்பது மகிழ்ச்சி. கதாநாயகர்களுக்கு இணையாக அதிக அளவு ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவர் படத்தில் நான்கு காட்சிகளாவது நடிக்க மாட்டோமா என்று பல சமயங்களில் ஏங்கி இருக்கிறேன். அவரை நேரில் சந்தித்து பேசிய பொழுது இந்த கதை குறித்து சொன்னார். ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றி சொல்லி வரும் பொழுது எல்லாவற்றிற்கும் நடிகர்களை கமிட் செய்து விட்டார். அப்போது லீவ் ரோல் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் தான் அதை செய்கிறீர்கள் என்று சொன்னார். நான் சந்தோஷத்தில் எழுந்த போது அந்த வானத்தில் முட்டி இருப்பேன். பிறகு ‘வடசென்னை’, ‘அசுரன்’ படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு வாய்ப்பு வருமா என்று எதிர்பார்த்து இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகாமல் வெற்றிமாறன் அழைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்குக் இருக்கும் வேறொரு நடிகனை தட்டி எழுப்பினார். அவருக்கு நன்றி”.

viduthalai

நடிகர் விஜய்சேதுபதி, ” இப்போது சூரி பேசியது எப்படி உங்களை ஆட்கொண்டுள்ளதோ அதுபோலவே படம் முழுக்க அவரது கதாபாத்திரமும் நடிப்பும் உங்களை ஆட்கொள்ளும். வெற்றிமாறனின் ‘வடசென்னை’யில் நடிப்பதை நான் மிஸ் செய்து விட்டேன். அதனால் ‘விடுதலை’ படத்தின் வாய்ப்பை தவற விரும்பவில்லை. ‘வடசென்னை2’ கதை எனக்குத் தெரியும். நன்றாக உள்ளது. ‘விடுதலை’ படத்திற்கு எட்டு நாள் தான் கால்ஷீட் என சொல்லி வெற்றிமாறன் என அழைத்து சென்றார். ஆனால் போன பின்பு தான் தெரிந்தது அது எனக்கான ஆடிஷன் என்று. வெற்றி சாருடன் வேலை பார்த்தது மிகவும் அறிவு சார்ந்தது முக்கியமானதாக பார்க்கிறேன். ராஜா சாரோட இசையை போலவே அவருடைய பேச்சும் மிகவும் ஆழமானது அதை கூர்ந்து கவனியுங்கள்”.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, ” இந்தப் படம் எல்லா வகையிலும் எல்லாருக்கும் சவாலானதாக இருந்தது. இந்தப் படத்தில் வேலை பார்த்த என்னுடைய அணி, தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்குமே நன்றி அனைவரும் மிக கடினமான உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த கதையை கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. எந்த ஏரியாவில் கேட்டாலும் அவரிடம் ஏற்கனவே ஒரு கதை இருக்கும். அந்த அளவுக்கு எழுதி குவித்து இருக்கிறார். ராஜா சாரிடம் வேலை பார்த்தது முன்பே சொன்னது போல மிகப்பெரிய அனுபவம். நான் அடிக்கடி கோபப்படுவேன். கோபம் என்பது என்னுடைய இயலாமை தான். அந்த நேரத்தில் அந்த கோபம் எல்லாம் என்னுடைய உதவி இயக்குநர்கள் மேல்தான் திரும்பும். இந்த சமயத்தில் அவர்களுக்கு நன்றியோடு சேர்த்து மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்துக்கு முதலில் நான்கு கோடி ரூபாய் தான் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் பற்றி சொன்னேன் ஆனால் அதையும் தாண்டி மூன்று மடங்கு வரை போய்விட்டது அதை எல்லாம் கேட்காது இந்த படத்தின் மீது அவர் ஒரு பார்வையும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அது முக்கியமானது. சூரியை வைத்து ஒரு எளிய படம் எடுத்துக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் உள்ளே வந்த பிறகு இன்னும் படம் பெரிதானது. சேதுவை வைத்து கிட்டத்தட்ட 65 நாட்கள் படம் பிடித்தோம். முதல் பாகத்தில் அவருடைய காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரைப் பற்றி தான் பேசி இருப்போம். இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வருகிறார். சில அரசியல் சிந்தனைகளை எல்லாம் படமாக்குவதற்கு விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இருப்பது மிகவும் நம்பிக்கை கொடுத்தது. 25 பக்க காட்சிகளை எல்லாம் இரண்டு மணி நேரத்தில் எடுத்து இருக்கிறோம். வசதியாக இருந்து பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ போன்ற படத்தில் நடிப்பது மிகவும் சிரமமானது. கௌதம் மேனன் நடிக்க உள்ளே வந்ததை விட ராஜீவ் நடிக்க ஒத்துக் கொண்டதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவரும் எளிதாக இந்த கதையில் ஒன்றிப் போனார். இந்த கதை என்னுடைய விருப்பம் தான். அதற்கு ஒத்துழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய உழைப்பையும் வெற்றியையும் என்னுடைய குரு பாலு மகேந்திராவுக்கும் என்னுடைய அசிஸ்டன்ட்ஸ்க்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்41 minutes ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் மாற்றம் – இந்த 5 ராசிகளுக்கு செல்வம், வெற்றி உறுதி!

school
செய்திகள்44 minutes ago

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!

ஆன்மீகம்48 minutes ago

அட்சய திருதியை 2026: 100 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் – இந்த 4 ராசிகளுக்கு செல்வ வெள்ளம்!

ஆன்மீகம்51 minutes ago

அட்சய திருதியை 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் அக்ஷய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்55 minutes ago

பாபா வாங்கா கணிப்பு 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு & வாழ்க்கை முன்னேற்றம்!

தொழில்நுட்பம்59 minutes ago

ஸ்கோடா கைலாக் மீது ரூ.75,000 வரை சலுகை: குறைந்த விலையில் பிரீமியம் SUV வாங்கும் வாய்ப்பு!

வணிகம்1 மணி நேரம் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

100 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு!

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

அட்சய திருதியை 2026: சுக்கிரன் ரிஷபத்தில் நுழைவு – மாளவ்ய ராஜயோகம் உருவாகி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. Martinstools | professional saas tools for everyone. power only virginia.