Connect with us

ஆன்மீகம்

சுக்கிரன் ராசி மாற்றம் 2025: 4 ராசிக்காரர்களுக்கு பணம், செழிப்பு, அதிர்ஷ்டம்!

Published

on

சுக்கிரன் ராசி மாற்றம்: 4 ராசிகளுக்கு வாழ்வில் திருப்பம்!
ஜனவரி 28, 2025 அன்று சுக்கிரன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த ராசி மாற்றம் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த போகிறது. பண வரவு, காதல் வாழ்க்கை, சமூக மரியாதை உள்ளிட்ட பல நன்மைகள் இவர்களை சூழ்ந்துகொள்ளும்.

ரிஷப ராசி

சுக்கிரன் ராசி மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கின்றது. நீண்ட நாள் நிலுவையில் இருக்கும் சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காதல் வாழ்க்கையில் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும். கணவன்-மனைவிக்கிடையே நல்ல புரிதல் உருவாகும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் முழு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கிறது. பணம் சம்பந்தமான லாபங்கள் மட்டுமல்லாமல் சமூக மரியாதையும் அதிகரிக்கும். கணவன்-மனைவியுடன் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. குழந்தைகள் தொடர்பான நல்ல செய்தி பெறுவீர்கள். வேலை தேடிவந்தவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்திகளை பெறுவீர்கள். பெற்றோரின் உதவியுடன் நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். பங்குச் சந்தையில் ஈடுபட்டவர்கள் லாபம் அடைவார்கள்.

மகர ராசி

மகர ராசிக்காரர்கள் பெரிய அளவிலான சொத்தை வாங்கி அதில் லாபம் காண வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது. இந்த நேரத்தில் செய்த முதலீடுகள் எதிர்காலத்தில் பெரும் நன்மையை தரும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..