தமிழ்நாடு
ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி என அமித்ஷா கூறவில்லை: டிடிவி தினகரன்
ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி படிக்க வேண்டுமென அமைச்சர் அமித்ஷா கூறியது போல நான் பத்திரிகைகளில் படிக்கவில்லை என டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது ’மாநிலங்களுக்கு இடையே பயன்படும் மொழியாக ஆங்கிலம் தற்போது இருப்பதாகவும் அதற்கு பதிலாக ஹிந்தி மொழியை அனைவரும் பயில வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு அதிமுக திமுக உள்பட அனைத்து கட்சிகளுமே தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து கூறிய போது ’இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாகத்தான் இந்தி மொழி என மத்திய அமைச்சர் கூறியதாகத் தான் நான் படித்தேன் என்றும் மற்றபடி ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என அவர் கூறியதாக எனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திமொழி என்பதற்கும், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்த மொழி என்பதற்கும் என்ன வேறுபாடு? என்ன நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.