தமிழ்நாடு
திமுக எம்பியின் மகன் திருச்சியில் திடீர் கைது: அண்ணாமலை கண்டனம்

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா இன்று திருச்சியில் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சமீபத்தில் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவர் திமுகவில் உள்ள பிரபலங்களை பாஜகவில் இழுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சூர்யா இன்று உளுந்தூர்பேட்டையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது அவரது காரின் மீது தனியார் பேருந்து மோதியது. இதனையடுத்து தனியார் பேருந்து உரிமையாளரை சூர்யா மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தனியார் பேருந்து உரிமையாளரின் புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு பொய் வழக்கு போடுவது புதியது அல்ல என்றும், சகோதரர் சூர்யா கைதுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.