இந்தியா
அபாய சங்கிலி பிடித்து ரயிலை நிறுத்திய 5 பேர் ரயிலில் அடிபட்டு பரிதாப பலி!

அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்திய 5 பயணிகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே பழுதாகி நின்ற ரயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது எதிர்த்திசையில் வந்த ரயில் மோதியதால் 5 பேர் உயிரிழந்தனர் .
ஆந்திர மாநிலம் செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து புகை வந்தது. இதன் காரணமாக ரயிலில் உள்ள பயணிகள் சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
இதனையடுத்து பயணிகள் சிலர் கீழே இறங்கி புகை வந்த ரயில் பெட்டியை அருகில் இருந்த இன்னொரு தண்டவாளத்தில் நின்று கொண்டுவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்திசையில் வந்த கொல்கத்தா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே தண்டவாளத்தில் நின்றிருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விபத்தில் ஒருசிலர் காயம் அடைந்திருப்பதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.