சினிமா செய்திகள்
டிசம்பர் 21ல் டபுள் ட்ரீட் தரும் டொவினோ தாமஸ்!

வரும் டிசம்பர் 21ம் தேதி டொவினோ தாமஸ் நடிப்பில் 2 படங்கள் ரிலீசாகின்றன.
தனுஷின் மாரி 2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகும், டொவினோ தாமஸ், அதே நாளில் மலையாளத்தில் ஹீரோவாக நடித்த ’எண்டே உம்மாண்ட பேரு’ படமும் ரிலீசாகிறது. இதனால், அவரது ரசிகர்களுக்கு வரும் டிசம்பர் 21ம் தேதி டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.
இன்று வெளியான மாரி 2 டிரெய்லரில் டொவினா தாமஸ் டாட்டுக்களுடன் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் வரும் ஜேக்ஸ் பேரோ போன்ற கெட்டப்பில் தோன்றுகிறார்.
யூடியூப் டிரெண்டிங்கில் பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளி மாரி 2 டிரெய்லர் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















