Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/10/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

04-10-2020 

ஞாயிற்றுக்கிழமை

மேஷம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன் –  தைரிய ஸ்தானத்தில் ராஹூ –   சுக  ஸ்தானத்தில்  சந்திரன் –  பாக்கிய ஸ்தானத்தில்    கேது, சனி –  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா) – அயன, சயன, போக ஸ்தானத்தில்   புதன், சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.  

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று மனோதிடம் பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பிட்ட நன்மை நடக்கும் நாள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் தொல்லைகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்:

கிரகநிலை:

ராசியில்  சுக்ரன் – குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ –  தைரிய ஸ்தானத்தில்  சந்திரன்  – அஷ்டம ஸ்தானத்தில்  கேது, சனி  – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,   குரு (அதி. சா)  – லாப ஸ்தானத்தில்  புதன், சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று முழுபலமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் உருவாகாது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இடர் ஏற்பட இடமுண்டானதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில்  ராஹூ – குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில்    கேது, சனி – அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) –  தொழில் ஸ்தானத்தில்  புதன்,  சூர்யன்  – அயன, சயன, போக ஸ்தானத்தில்  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று நன்மைகளை அனுபவம் மூலமாக கிடைக்கப் பெறுவீர்கள். உறவினரால் ஒரு தொல்லை ஏற்படலாம். மேலதிகாரிகளில் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பாக அமையும். தாம்பத்தியம் சகஜநிலையில் இருந்து வரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன் – ரண, ருண ஸ்தானத்தில்   கேது, சனி –  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா)  –  பாக்கிய ஸ்தானத்தில்  புதன், சூர்யன் –  லாப ஸ்தானத்தில்  சுக்ரன் –  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் மிகவும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். முக்கிய நபர்களால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும், பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

சிம்மம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்   கேது, சனி –  ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  அஷ்டம ஸ்தானத்தில்   புதன், சூர்யன் – தொழில் ஸ்தானத்தில்  சுக்ரன்  –  லாப ஸ்தானத்தில்  ராஹூ –  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி:

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்   கேது, சனி – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  களத்திர ஸ்தானத்தில்  புதன், சூர்யன் –   பாக்கிய  ஸ்தானத்தில் சுக்ரன் –  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ –  லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  கேது, சனி – சுக  ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) –  ரண, ருண ஸ்தானத்தில்   புதன், சூர்யன் –  அஷ்டம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.  

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று  எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  கேது, சனி  –   தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா) – பஞ்சம ஸ்தானத்தில்   புதன், சூர்யன் –  களத்திர ஸ்தானத்தில்   சுக்ரன் –  அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு –  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று  எல்லா நன்மைகளும் வந்து சேரும். மனோதிடம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

தனுசு:

கிரகநிலை:

ராசியில்   கேது, சனி – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  சுக  ஸ்தானத்தில்  புதன்,  சூர்யன் –  ரண, ருண  ஸ்தானத்தில்  சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில்  ராஹு – அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய்,  குரு (அதி. சா) –  தைரிய ஸ்தானத்தில்   புதன்,  சூர்யன் – பஞ்சம  ஸ்தானத்தில்  சுக்ரன் –  ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ –  களத்திர ஸ்தானத்தில் சந்திரன் –  அயன, சயன,  போக ஸ்தானத்தில்   கேது, சனி  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கும்பம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன்,  சூர்யன்  – சுக  ஸ்தானத்தில்  சுக்ரன் –  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  –  ரண, ருண  ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் கேது, சனி – அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்:

கிரகநிலை:

ராசியில்  புதன்,  சூர்யன் –  தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் –  சுக ஸ்தானத்தில்  ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் –  தொழில்  ஸ்தானத்தில்  கேது, சனி – லாப ஸ்தானத்தில்  செவ்வாய்,  குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று பகல் 12.47 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized23 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
No coding, no credit card, no experience needed — choose what fits you and get started..