Connect with us

தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை குறைந்தது: இன்றைய விலை என்ன?

Published

on

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருவதைப் போலவே இந்தியாவிலும் குறிப்பாக சென்னையிலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இறக்கத்திலும் மாறி மாறி உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்ததால் தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்று தங்க நகை கடைக்காரர்களும் பொதுமக்களும் கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4445 என்று விற்பனை ஆன நிலையில் இன்று ஒரு கிராம் 5 ரூபாய் குறைந்து ரூ.4440 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் நேற்று ஒரு சவரன் விலை ரூபாய் 35560 என்ற விலையில் விற்பனை ஆன நிலையில் இன்று ஒரு சவரன் விலை ரூ.35520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் விலை ரூபாய் 4799 என்றும் 8 கிராம் விலை ரூபாய் 38392 என்றும் விற்பனையாகி வருகிறது

தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளியின் விலை சிறிது உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது நேற்று ஒரு கிராம் வெள்ளி 73.40 ரூபாய் என விற்பனையான நிலையில் இன்று 73.50 எனவும் நேற்று ஒரு கிலோ 73,400 என விற்பனையான நிலையில் இன்று 73,500 என்று விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Pages sell products.