Connect with us

தமிழ்நாடு

தங்கம் விலை இன்றும் வீழ்ச்சி: சென்னையில் இன்றைய நிலவரம்!

Published

on

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 400 வீழ்ச்சி அடைந்ததால் தங்கம் வாங்கும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் இரண்டும், சவரனுக்கு ரூபாய் 16ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை தற்போது பார்ப்போம்.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4371.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 ரூபாய் குறைந்து ரூபாய் 4369.00என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 34968.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 16 குறைந்து ரூபாய் 34952.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4733.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 37864.00எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 2ம், ஒரு சவரன் ரூபாய் 16ம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது நேற்று வெள்ளியின் விலை ரூ. 65.90 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 70 காசுகள் குறைந்து ரூபாய் 64.20 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 64200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Instant stripe payments.