வேலைவாய்ப்பு
புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு ஆட்சேர்ப்பு!

புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க இப்போது தான் நேரம்!
புதுச்சேரி மாநில சாலைப் போக்குவரத்து கழகத்தில் தற்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பொது மேலாளர் முகமது இஸ்மாயில் அறிவித்துள்ளார். இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
ஊதிய விவரம்:
ஓட்டுநர் – தினசரி ரூ.560
நடத்துநர் – தினசரி ரூ.553
(பணிநேரம்: 8 மணி நேரம்)
தகுதி மற்றும் வயது வரம்பு:
ஓட்டுநர்:
கல்வி தகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy Vehicle License)
2 ஆண்டு அனுபவச் சான்றிதழ் அவசியம்
வயது வரம்பு: 25 முதல் 35 வயது (01.04.2025 அன்று )
நடத்துநர்:
கல்வி தகுதி: குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி
நடத்துநர் உரிமம், முதலுதவி சான்றிதழ்
6 வருட பேருந்து நிறுவ அனுபவச் சான்றிதழ்
வயது வரம்பு: 25 முதல் 32 வயது (01.04.2025 அன்று)
(அரசு விதிமுறைகளின்படி வகுப்பினருக்கான வயது தளர்வு அளிக்கப்படும்.)
தேர்வு செயல்முறை:
தகுதித்திறன் தேர்வு
உடற்தகுதி தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தின் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று, தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


