தமிழ்நாடு
தமிழ்நாடு கோவில்களில் அன்னதானம் உணவுத் திட்டத்தைத் தணிக்கை செய்ய மூன்றாம் தரப்பு குழு!

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் செயல்பட்டு வரும் அன்னதானம் திட்டத்தைத் தனிக்கை செய்ய மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்களை இந்து அறநிலையத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
இப்போது இந்த அன்னதானம் திட்டம் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 764 கோவில்களில் 80,000 நபர்களுக்கு தினமும் மதியம் உணவு வழங்கப்படுகிறது.
இந்த மூன்றாம் தரப்பு தனிக்கை நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அன்னதானம் திட்டத்தைத் தனிக்கை செய்து அரசுக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.