தமிழ்நாடு
முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. மகளிர் உரிமை தொகை ரூ.1000 குறித்த முக்கிய முடிவு!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் அனைத்து தமிழ்நாடு அமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ள நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் வழங்கப்பட்ட மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெற உள்ள அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கியமாக இன்று நடைபெறும் கூட்டத்தில் வேளான் பட்ஜெட் குறித்த திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்படலாம் என தகவல்கள் கூறப்படுகிறது.
மார்ச் 20-ம் தேதி 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.