தமிழ்நாடு
சென்னை வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்துள்ள 750 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்!

சென்னையில் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்குப் பிறகு அதற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டது ஏரிகளை ஆக்கிரமித்ததுதான்.
இந்நிலையில் 2021, 2022 நிதியாண்டுகளிலும் சென்னையில் வெள்ள பாதிப்புகள் பெரும் அளவில் ஏற்பட்டது. வெள்ள பாதிப்பில் தானாக முன்வந்து தலையிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதற்கான காரணங்களை அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது.

Velachery Lake
இப்போது சென்னையில் உள்ள பல்வேறு ஏரிகளை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, வெள்ள பாதிப்பில் மிகவும் பாதிக்கப்பட்ட வேளச்சேரியில் உள்ள ஏரியை ஆக்கிரமித்துள்ள 750 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒரு காலத்தில் 265 ஏக்கராக இருந்த வேளச்சேரி ஏரி இப்போது வெறும் 55 ஏக்கராக உள்ளது. எனவே இந்த ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்குத் தமிழ்நாடு அரசு அளித்துள்ள பதிலில், ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Velachery Lake
இந்த நோட்டீஸ்க்கும் கட்டிட உரிமையாளர்கள் அளிக்கும் பதில் அரசுக்குத் திருப்திகரமாக இல்லாவிட்டால், அவர்கள் வெளியேற்றப்பட்டு, கட்டிடங்கள் இடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கட்டிட உரிமையாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை அரசு செய்து தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.