டிவி
இனி Zeeதமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் ‘அதி’ இவர்தான்!
Published
2 years agoon
By
Barath
ஜீ தமிழ் சேனலின் மிகவும் பிரபலமான சீரியல் ‘செம்பருத்தி’. இந்த சீரியலின் கதாநாயகனான ‘ஆதி’ கேரக்டரில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். இவர் சில காரணங்களுக்காக செம்பருத்தியிலிருந்து விலகினார். இந்நிலையில் இவருக்கு பதில் அதில் நடிக்கப் போவது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பருத்தி கார்த்திக் தொடரிலிருந்து விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்ற கேள்வி பரவலாக சமூக வலைதளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. ஜீ தமிழ் சேனலில் செம்பருத்தி தொடர் ஒளிபரப்பின் போது கார்த்திக் தொடரில் இருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உள்வட்டார செய்திகளின் அடிப்படையில் தொடரின் சீனியர் நடிகை மற்றும் வில்லி நடிகை ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ மோதலில் நாயகன் கார்த்திக் பலி ஆடாக ஆக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக செம்பருத்தி தொடரின் ஒட்டுமொத்த நடிகர், நடிகையர் குழுவுமே ஒரு வித ஈகோ மனப்பான்மையால் முட்டலும் மோதலுமாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல தொகுப்பாளர் அக்னி, ஆதி கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். இது குறித்து அவரே அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ இதோ:
You may like
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘செம்பருத்தி’ நடிகையா? ரசிகர்கள் அதிர்ச்சி
-
இன்று முதல் கத்தரி வெயில்: வாட்டி வதைக்கப்போகிறது கோடை வெப்பம்!
-
அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்: ‘திரெளபதி இயக்குனரின் ஆவேச டுவீட்!
-
’செம்பருத்தி’ நடிகர்களுக்குள் என்னதான் பிரச்னை?- ஹீரோ ‘கார்த்திக்’ விலகியது ஏன்?
-
செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறினார் கார்த்திக்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஜீ தமிழ்!
-
செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கம்.. லைவில் கதறி அழுத ஜனனி!