உலகம்
2023 ஆம் ஆண்டின் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள். இந்தியாவுக்கு எந்த இடம்?

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டுமானால் பாஸ்போர்ட் முக்கியம் என்பது தெரிந்ததே.அந்த வகையில் உலக நாடுகளில் உள்ள பாஸ்போர்ட்டுகளில் எந்த பாஸ்போர்ட் வலிமையானது என்பது குறித்த ஆய்வு எடுக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம்.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஜப்பான் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. ஜப்பானிய குடிமக்கள் 193 நாடுகளுக்கு அதாவது உலகின் 85% நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்கின்றனர். எனவே ஜப்பானிய பாஸ்போர்ட் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பட்டியலின்படி 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலில் ஜப்பானைத் தொடர்ந்து சிங்கப்பூர், தென் கொரியா நாடுகள் உள்ளன. இந்த இரு நாடுகளின் குடிமக்கள் உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கு இலவசமாக விசா இன்றி பயணம் செல்லலாம்.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை விட மூன்று ஆசிய நாடுகளை முன்னிலையில் உள்ளன. ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியாவை அடுத்து ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகள் 4வது மற்றும் 5வது இடங்களை பெற்றுள்ளன. இந்நாட்டு மக்கள் 190 நாடுகளுக்கு விசா இன்றி பயணம்செல்லலாம்.
பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க் நாடுகளின் குடிமக்கள் 189 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம். இந்த பட்டியலில் இந்தியர்கள் வெறும் 59 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் பயணம் செய்யும் வகையில் உள்ளது.
உலகின் மிக மோசமான பாஸ்போர்ட் என்றால் அது ஆப்கானிஸ்தான் நாட்டின் பாஸ்போர்ட் தான். இந்நாட்டின் குடிமக்கள் விசா இன்றி 27 நாடுகளுக்கு மட்டுமே செல்லலாம். ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளும் மோசமான பட்டியலில் உள்ளன.