தமிழ்நாடு
சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் சிக்கியது அரசுப்பேருந்து: சங்கிலிகளை கட்டி இழுக்க முயற்சி

கடந்த சில நாட்களாக வங்க கடலில் தோன்றிய தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னையில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பெய்த கன மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள தி நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாமல் இருப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளில் நீர் மூழ்கியதை அடுத்து அந்த பகுதிகளில் பேருந்து உள்பட வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதையில் திடீரென அரசு பேருந்து ஒன்று சிக்கியது. இதனையடுத்து அந்த பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக காப்பாற்றப்பட்டனர். மேலும் பேருந்தை சங்கிலி கட்டி இழுக்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பேருந்தில் இருந்த பயணிகள் தீயணைப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டவுடன் பேருந்தை சங்கிலி கட்டி இழுக்கும் முயற்சி வெற்றிகரமாக முடிந்தது என்றும் தற்போது அந்த பகுதியில் வெள்ள நீர் வடியும் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதியில் அரசு பேருந்து சுரங்கப்பாதைகள் சென்றதால் தான் தண்ணீரில் மூழ்கியது என்பதும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் போக்குவரத்து தடை செய்யப்பட்ட பகுதிகளில் பேருந்துகள் உள்பட எந்த வாகனங்களும் செல்ல வேண்டாம் என போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















