சினிமா செய்திகள்
பொன்னாடை போர்த்தி விஜய்க்கு பரிசு வழங்கிய முதல்வர்: வைரல் வீடியோ

தளபதி விஜய் சற்று முன்னர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை சந்தித்த நிலையில் முதல்வர் சந்திரசேகரராவ் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசும் வழங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை விஜய் நேரில் சந்தித்தார் .
இந்த சந்திப்பின்போது விஜய் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அதேபோல் முதல்வரும் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து நினைவு பரிசு வழங்கினார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் இந்த சந்திப்பில் முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய்யின் வீட்டிற்கு வந்த புதுவை முதல்வர் அவரை சந்தித்தார் என்பது தெரிந்ததே.
Exclusive Video of Telangana CM & @actorvijay meet 😍 #Thalapathy66 pic.twitter.com/YSxamIJfQl
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) May 18, 2022