வணிகம்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திலும் வரிச்சலுகை – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme – UPS) தற்போது வரிச்சலுகை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமே வரிச் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த UPS திட்டத்தை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அதே வரிச்சலுகை வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கான நடைமுறைத் திட்டங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மார்ச் 19, 2025 அன்று வெளியிட்டது. இதில் PFRDA (Implementation of UPS) Regulations, 2025 எனும் விதிமுறைகள் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவின் மூலம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும் NPS போலவே வரிச்சலுகை பெறும் திட்டமாக அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் வரிச் சலுகை, ஊக்கத்தொகை போன்ற நன்மைகளை பெற முடியும்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஊழியர்களின் ஓய்வூதிய நலத்தையும், நிதி சுமையையும் குறைக்கும் வகையிலும் UPS திட்டம் முன்னேற்றப்படுவதாக அரசு கூறியுள்ளது.
















