வணிகம்
வங்கியில் முன்கூட்டியே கடன் செலுத்தினால் இனி அபராதம் கிடையாது – ஆர்பிஐ அதிரடி உத்தரவு!
Published
11 மாதங்கள் agoon
By
Poovizhi
ஆர்பிஐ புதிய உத்தரவு: வீட்டுக் கடன், சிறு தொழில் கடன் வாங்கியவர்களுக்கு இனி அபராதம் கிடையாது!
கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தும் தனிநபர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.
ஜனவரி 1, 2026 முதல், வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் மாறும் வட்டி விகிதத்தில் (Floating Rate) கடன் பெற்ற நபர்கள் தங்களது கடனின் அசல் தொகையை முன்கூட்டியே செலுத்த விரும்பினால், அதற்காக எந்தவிதமான Foreclosure Charges அல்லது Prepayment Penaltyயும் வங்கிகள் வசூலிக்க அனுமதி இல்லை என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு பொதுத்துறை வங்கிகள், தனியார் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும்.
முதலாளித்துவ நிதி சுதந்திரத்தை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு கடன், கல்விக் கடன், வணிகக் கடன் மற்றும் MSME (Micro, Small and Medium Enterprises) கடன்கள் வாங்கியவர்கள் பெரிய அளவில் நன்மை பெறுகிறார்கள்.
இதுவரை 3% வரை அபராதம் வசூலித்து வந்த வங்கிகளுக்கு இது ஒரு கட்டுப்பாடாக அமைந்துள்ளது. ஆனால், இந்த உத்தரவு மாறாத வட்டி விகிதத்தில் (Fixed Rate) கடன் பெற்றவர்களுக்கு பொருந்தாது.
இனி வாடிக்கையாளர் முன்கூட்டியே கடனை செலுத்த விரும்பினால், எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் கடனில் இருந்து விடுபட முடியும். இது சிறு நிறுவனங்களின் செலவுகளை குறைத்து, நிதி சுதந்திரத்தை உறுதி செய்யும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
















