தமிழ்நாடு
டிஎன்பிஎஸ்சி தலைவராக கா.பாலச்சந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவு

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி கடந்த 2 மாதமாக காலியாக இருந்த நிலையில் புதிய தலைவர் நியமனம்
2000-2006 வரை தருமபுரி, குமரி, ஈரோடு, விழுப்புரம் ஆட்சியராக பணியாற்றிவர் கா.பாலச்சந்திரன்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி ஓய்வு பெற்ற நிலையில் புதிய தலைவராக பாலச்சந்திரனை நியமனமித்துள்ளது அரசு
தற்போது வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக கா.பாலச்சந்திரன் பழனி துணை ஆட்சியராக பணியை தொடங்கினார்
சிறுசேமிப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருது பெற்றார். இவர் சமூக நலத்துறை, வேளாண்மைத்துறை, உள்ளாட்சித் துறை, உணவு மற்றும் பாதுகாப்பு துறை, கூட்டுறவுத்துறை, தொழில் துறை, காதி போர்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தொழிலாளர் நலத் துறை ஆகிய துறைகளின் தலைவராகப் பணியாற்றியவர். கடந்த 2 ஆண்டுகளாக வணிக வரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.















