தமிழ்நாடு
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கே குமரி கடல்பகுதிக்கு அருகே வளிமண்டல அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று பெரும்பாலான தென்மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரையில் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மற்ற பகுதிகளில் வெயில் அடிக்கிறது.












