தமிழ்நாடு
தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு!

கனமழை காரணமாக நாளை நடைபெற இருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் கனமழை பெய்து வருவதையடுத்து நாளை நடைபெற இருந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறுவதற்கு பதிலாக நவம்பர் 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












