தமிழ்நாடு
நிதியமைச்சர் நிர்மலாவிடம் முதல்வர் ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ,உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வைத்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் இன்று சற்று முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்துள்ளார். தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகை இழப்பீடு நிலுவைத் தொகை ரூ.13,504.74 கோடி மற்றும் ரூ.20,860.40 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் முதல்வர் நிதியமைச்சரிடம் கேட்டு கொண்டார்.
மேலும் 2022 – 23 நிதியாண்டில் தமிழ்நாடு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்துள்ளார்.
எனவே இழப்பீடு வழங்கும் காலத்தை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக நீடிக்க வேண்டும் என்றும் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலமைச்சர் நேரில் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன