Connect with us

சினிமா

ஜெயிலர் படத்தில் இணைந்த தமன்னா; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

Published

on

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் யார் ஹீரோயின் என ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருந்த நிலையில், நடிகை தமன்னா தான் ஹீரோயின் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக தமன்னா தான் நடிக்கப் போகிறார் என ஏற்கனவே தகவல்கள் கசிந்த நிலையில், சன் பிக்சர்ஸ் ரொம்பவே அந்த விஷயத்தை சீக்ரெட்டாக வைத்திருந்தது.

மோகன்லால் நடித்து வரும் தகவல்கள் லீக்கான நிலையில், தொடர்ந்து மோகன்லால், சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் படத்தில் நடித்து வருவது குறித்த அப்டேட்களை சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் கேட்காமலே வெளியிட்டு படத்திற்கு ஹைப்பை க்ரியேட் செய்ய ஆரம்பித்து இருக்கிறது.

ஜெயம் ரவி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வந்த தமன்னா முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடி போட்டு இந்த படத்தில் நடிக்க உள்ளார். ஃபிளாஷ்பேக் போர்ஷனில் தமன்னா வருவாரா? இல்லை வயதான கெட்டப்பில் தோன்றிய ரஜினிக்கே அவர் ஜோடியாவாரா என்பது படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியானால் தெரிந்து விடும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக இந்த படத்தை இயக்குநர் நெல்சன் மாற்றி வருகிறார் என்றும் பீஸ்ட் படத்தில் எதிர்கொண்ட விமர்சனங்களுக்கு விரைவில் இந்த சம்மரில் தரமான பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?