சினிமா செய்திகள்
ஆஸ்கார் விருதை நெருங்கிவிட்டதா சூர்யாவின் சூரரை போற்று?

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடினர்.
ஜிஆர் கோபிநாத் என்ற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படமான இந்த படம், ஒரு சாதாரண இளைஞர் எப்படி விமானம் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகிறார் என்பதை மிகவும் சிறப்பாக தனது திரைக்கதையின் மூலம் இயக்குனர் சுதா கொங்காரா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே ஒரு சில பிரிவுகளுக்கு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை ஆகிய 2 பிரிவிற்கு ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்ற படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இதுவரை ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்றுள்ள 366 படங்களில் சூரரைப்போற்று படமும் ஒன்று என்பதும் சூர்யா சிறந்த நடிகராகவும் அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான பட்டியலிலும் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மார்ச் 15-ம் தேதி அடுத்த கட்ட பட்டியல் வெளியாகும் என்றும் அந்த பட்டியலிலும் சூரரைப்போற்று திரைப்படம் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த படம் ஆஸ்கர் விருதை நெருங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.




















