சினிமா செய்திகள்
அஜித்-சன்பிக்சர்ஸ் இணையும் முதல் படம்: இயக்குனர் இவர்தான்!
ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் இன்னும் கமல்ஹாசன் அஜித் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது அஜித் படம் குறித்து சன் பிக்சர்ஸ் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அஜித்தின் 61வது படத்தை போனிகபூர் தயாரிக்கும் நிலையில் 62 வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது தெரிந்ததே .
இந்த நிலையில் அஜித்தின் 63வது படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் ஒப்புக்கொண்டதாகவும் இதற்கான பேச்சு வார்த்தை முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் அஜித்துக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க சன் பிக்சர்ஸ் ஒப்புக்கொண்டதாகவும், மற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்துள்ள அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.