சினிமா செய்திகள்
ரஜினியின் அடுத்த படம்: சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் அவருடைய அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் அறிவிப்பு ரஜினியின் ‘தலைவர் 169 படத்தின்’ அறிவிப்பு தான் என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது. பேட்ட, அண்ணாத்த படத்திற்கு பின்னர் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் ரஜினியுடன் முதல் முறையாக இணைவதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Announcement alert ????
Today @ 6 PM pic.twitter.com/yijX9z36vI
— Sun Pictures (@sunpictures) February 10, 2022


















