ஆன்மீகம்
சூர்யன் உத்திரம் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வமும் நம்பிக்கையும் பெருகும்!

கிரகங்களின் அரசனாக போற்றப்படும் சூர்ய பகவான் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி உகந்த உத்திரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். தற்போது அவர் பூரம் நட்சத்திரத்தில் இருக்கும் நிலையில், இந்த மாற்றம் நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளை தரவுள்ளது.
சூர்யன் உத்திரத்தில் பிரவேசிப்பது, வாழ்க்கையில் புதிய நம்பிக்கை, எதிர்பாராத பண வரவு, தொழில் மற்றும் குடும்பத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிடம் கூறுகிறது.
அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்:
மேஷம் (Aries):
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்பட்டு பணவளம் பெருகும். குடும்ப அழுத்தங்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம் (Cancer):
பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். காதல் வாழ்விலும் முன்னேற்றம் காண்பீர்கள்.
சிம்மம் (Leo):
பணியிடத்தில் சிறந்த பெயரும் பாராட்டும் கிடைக்கும். முன்னர் எடுத்த தொழில் முடிவுகள் நல்ல பலனை தரும். நிலம், கட்டடம், வாகனம் வாங்கும் வாய்ப்புகள் அதிகம்.
துலாம் (Libra):
சமூக மரியாதை உயரும். வேலைக்குச் சம்பந்தமான விஷயங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லும். வெற்றிக்கான வாய்ப்பு உறுதி. வெளிநாடு அல்லது தூரப் பயணம் அமையும்.
