சினிமா செய்திகள்
’அட்டகாசமான ‘ஆர்.ஆர்.ஆர்.’ டிரைலர்: மூன்று நிமிட பிரமாண்ட விருந்து!
Published
1 year agoon
By
Shiva
‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய இரண்டு பிரம்மாண்டமான உலகப்புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிய அடுத்த திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படம் வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாகுபலி படங்களுக்கு இணையாக உள்ள காட்சிகள் இந்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திலும் உள்ளன என்பதும் குறிப்பாக ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரது ஆக்ஷன் காட்சிகள் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நிமிடங்கள் பிரம்மாண்டமான திரை விருந்து இந்த டிரைலரில் கொடுத்துள்ள எஸ்எஸ் ராஜமவுலி, 3 மணி நேர படத்தில் எப்படி கொடுத்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. அந்த அளவுக்கு அனைத்து காட்சிகளிலும் பிரம்மாண்டம், ஆவேசம், ஆக்ரோஷம், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக கொந்தளிக்கும் வீரர்கள் என இந்த படத்தின் ட்ரைலரில் உள்ள காட்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிரைலரை தற்போது கண்டு களியுங்கள்.
You may like
-
அமீர்கானின் லகான் படத்திற்கு பிறகு ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்ற ஆர்ஆர்ஆர் நாட்டுக்கூத்து!
-
’தெலுங்கு வாடை ரொம்ப ஓவரா இருக்குதே.. அதற்குள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற ‘வாரிசு’
-
’வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி, சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? அஜித் அதகளப்படுத்தும் ‘துணிவு’ டிரைலர்
-
’ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கு கோல்டன் குளோப் விருது? உலக அளவில் கெத்து காட்டும் இந்திய திரைப்படம்!
-
என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் ரஜினி பட வசூலை எட்ட முடியாத ஆர்ஆர்ஆர்!