சினிமா செய்திகள்
10 கிராம் தங்கக்காசு, ரூ.10 லட்சம் ரொக்கம்: ‘புஷ்பா’ படக்குழுவினர்களுக்கு வாரி வழங்கிய அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு தங்க காசுகள் மற்றும் லட்சக்கணக்கில் ரொக்கத்தை அல்லு அர்ஜுன் வாரி வழங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்திற்காக கடுமையாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உழைத்த படக்குழுவினர் சிலருக்கு அல்லு அர்ஜுன் தங்க காசு மட்டும் ரொக்கத்தை வாரி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் பணிபுரிந்த 35 முதல் 40 முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தலா 10 கிராம் தங்க காசு அல்லு அர்ஜுன் வழங்கியுள்ளார். ஒரு தங்க காசின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. அதேபோல் சில முக்கிய படக்குழுவினர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. புஷ்பா படக் குழுவின் உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகளை வாரி வழங்கிய அல்லு அர்ஜுனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.