தமிழ்நாடு
ஸ்ரீப்ரியாவிடம் பணம் கேட்டு அடம்பிடித்த குடிகார ரசிகர்: தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு

நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென குடிகார ரசிகர் ஒருவர் அவரிடம் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா கடந்த சில நாட்களாக அந்த தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று இரவு அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது இந்த பகுதி மக்களின் பிரச்சனைகளை என்னுடைய பிரச்சனையாக கருத்தில் கொண்டு பாடுபடுவேன் என்றும் என்னை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்றும் கூறினார்.
அப்போது அங்கு வந்த குடிகார ரசிகர் ஒருவர் தனக்கு செலவுக்கு பணம் கொடுங்கள் என்று கேட்டார். பணம் கொடுக்க கூடாது என்றும் விதிமுறைப்படி பணம் கொடுத்தால் தவறு என்றும் ஸ்ரீபிரியா கூறினார். ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து எனக்கு செலவுக்கு பணம் கொடுங்கள், நான் ஒரு இதய நோயாளி என்று அவர் கூறிக் கொண்டே இருந்தார்.
இதனையடுத்து அங்கு காவலுக்கு இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடம் ஸ்ரீப்ரியா புகார் செய்ய, அந்த குடிகார தொடரை காவல்துறை அதிகாரி அப்புறப்படுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்த அந்த தொண்டர், தான் ஒரு கமல் ரசிகர் என்றும் தனக்கு இதய நோய் இருப்பதாகவும் அதனால் மருத்துவச் செலவுக்கு ஸ்ரீப்ரியாவிடம் பணம் கேட்டேன் என்றும் ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார் என்றும் கூறியுள்ளார்.


















