கிரிக்கெட்
இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதோடு தொடரையும் இலங்கை அணி வென்றது
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 23 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 82 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 82 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளையும் ராகுல் சஹர் மட்டுமே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து இலங்கை அணி நேற்றைய போட்டியில் வென்றதோடு தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது என்பதும், இந்த தொடரில் ஒரு நாள் தொடரை இந்தியாவும் டி20 தொடரை இலங்கையும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக இலங்கையின் ஹசரங்கா தேர்வு செய்யப்பட்டார்














